தமிழக செய்திகள்

வார விடுமுறையையொட்டி திற்பரப்பு அருவியில் குவிந்த சுற்றுலா பயணிகள்

வார விடுமுறையையொட்டி திற்பரப்பு அருவியில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து காணப்பட்டது.

தினத்தந்தி

கன்னியாகுமரி,

வார இறுதி விடுமுறை நாளை முன்னிட்டு குமரி மாவட்டத்தில் உள்ள பல்வேறு சுற்றுலா தளங்கள் இன்று சுற்றுலா பயணிகளின் வருகையால் களைகட்டியது. அந்த வகையில் குமரியில் உள்ள முக்கிய சுற்றுலா தளங்களில் ஒன்றான திற்பரப்பு அருவியில் மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.

கோதையாற்றின் குறுக்கே அமைந்துள்ள திற்பரப்பு அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது. இந்த நிலையில் இன்று திற்பரப்புக்கு வெளியூர், வெளிமாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தந்தனர். அவர்கள் அருவியில் உற்சாகத்துடன் குளித்து மகிழ்ந்தனர். மேலும் அருவியின் மேற்பகுதியில் உள்ள தடுப்பணையிலும் படகு சவாரி செய்து கோதையாற்றின் இயற்கை அழகை கண்டு ரசித்தனர்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து