தமிழக செய்திகள்

தண்டவாள பராமரிப்பு பணி: திருச்சியில் ரெயில்கள் புறப்பட தாமதம்

தண்டவாள பராமரிப்பு பணி காரணமாக ரெயில்கள் புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

திருச்சி,

தண்டவாள பராமரிப்பு பணி காரணமாக, திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் ஒவ்வொரு ரெயிலாக அனுமதிக்கப்படுகிறது. இதனால், ரெயில்கள் புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக பயணிகள் அவதி அடைந்துள்ளனர்.

* பாண்டியன், நெல்லை, பொதிகை உள்ளிட்ட விரைவு ரெயில்கள் இன்று 5 மணி நேரம் தாமதமாக இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

* திருச்சி, தஞ்சை, மயிலாடுதுறை, விழுப்புரம், கரூர் முன்பதிவு இல்லாத ரெயில்கள் இன்றும், நாளையும் ரத்து செய்யப்படுகின்றன என அறிவிக்கப்பட்டுள்ளது.

* திருச்சியில் இருந்து வேளாங்கண்ணி உள்ளிட்ட இடங்களுக்கு முன்பதிவு இல்லாத ரெயில்கள் பகுதியாக ரத்து செய்யப்படுகின்றன.

* திருச்சி -திருவனந்தபுரம் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயில் 2 மணி நேரம் தாமதமாக புறப்படும்.

* சென்னை எழும்பூர் -திருச்சி சோழன் எக்ஸ்பிரஸ் ரெயில், 2 மணி நேரம் தாமதமாக புறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்