தமிழக செய்திகள்

திருப்பத்தூர் அருகே டிராக்டர் திருட்டு

திருப்பத்தூர் அருகே டிராக்டர் திருடிய நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

திருப்பத்தூர்

திருப்பத்தூர் பேரூராட்சிக்குட்பட்ட தம்பிபட்டி பகுதியில் சிலம்பக்கோண் ஊருணி கட்டுமான பணி நடைபெற்று வருகிறது. இதையொட்டி நேற்று முன்தினம் பணிகளை முடித்துவிட்டு டிராக்டர் வாகனத்துடன் டேங்கர் ஒன்றை நிறுத்தி சென்றுள்ளனர். நேற்று பணிக்கு வந்து பார்த்தபோது டிராக்டரை காணவில்லை. மர்ம நபர் திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து டிராக்டர் டிரைவர் புதுப்பட்டியை சேர்ந்த பழனிகுமார் திருப்பத்தூர் நகர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதேபோல் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பும் கட்டுமான பணி நடந்த இடத்தில் ஒரு டிராக்டர் திருடு போனது குறிப்பிடத்தக்கது. 

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு