தமிழக செய்திகள்

நாமக்கல்லில்தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

தினத்தந்தி

கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் ரூ.3 ஆயிரம் வழங்க வேண்டும். கட்டுமான தொழிலாளர்களுக்கு வீடு கட்டும் திட்டத்தை எளிமையாக்க வேண்டும். ஓய்வூதியத்தை நிலுவைஇன்றி விண்ணப்பித்த நாள் முதல் வழங்க வேண்டும். கட்டுமான தொழிலாளர்களுக்கு வழங்குவது போல அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு பணப்பயன்களை உயர்த்தி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் நாமக்கல் கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

இந்த ஆர்ப்பாட்டத்துக்கு சி.ஐ.டி.யு. கட்டுமான சங்க மாவட்ட தலைவர் ராஜேந்திரன், எச்.எம்.எஸ். மாவட்ட தலைவர் கலைவாணன், நாமக்கல் கூட்டமைப்பு தலைவர் ராமகிருஷ்ணன் ஆகியோர் தலைமை தாங்கினர். இதில் சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் வேலுசாமி, ஏ.ஐ.டி.யு.சி. மாவட்ட பொதுச்செயலாளர் தனசேகரன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு கோரிக்கைகளை விளக்கி பேசினர்.

இந்த ஆர்ப்பாட்டத்தின் போது ஓய்வூதியம் பெற்று வரும் தொழிலாளர்களை விசாரணை என்ற பெயரில் அலைகழிக்க கூடாது. நலவாரிய குளறுபடிகளை களைய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து

ஜன.30-ல் மேற்கு வங்காளம் செல்கிறார் அமித்ஷா

2047-ம் ஆண்டிற்குள் இந்தியாவில் 400 விமான நிலையங்கள்: பிரதமர் மோடி

7 முறை எம்.எல்.ஏ... அஜித் பவாரின் குடும்ப, அரசியல் வாழ்க்கை விவரம் வெளியீடு