தமிழக செய்திகள்

தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

ரூ.3 ஆயிரம் ஓய்வூதியம் கேட்டு தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தினத்தந்தி

கொல்லங்கோடு:

ரூ.3 ஆயிரம் ஓய்வூதியம் கேட்டு தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியமாக மாதந்தோறும் ரூ.3 ஆயிரம் வழங்க வேண்டும். சமூக பாதுகாப்பு திட்டங்களை விரிவாக்கம் செய்ய வேண்டும் என்பது உள்பட 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தியும், மணிப்பூர் கலவரத்தை கட்டுப்படுத்த தவறிய மத்திய அரசை கண்டித்தும் அனைத்து தொழிற்சங்கம் சார்பில் நடைக்காவு சந்திப்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. சி.ஐ.டி.யு. மாவட்ட துணைத்தலைவர் விஜயமோகன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தை மாவட்ட தலைவர் சிங்காரன் தொடங்கி வைத்தார். இதில் இந்திய தொழிற்சங்க தலைவர்கள் கோகுல் தாஸ், மரியதாஸ், ஏ.ஐ.டி.யு.சி. மாவட்ட நிர்வாகி துரைராஜ், எல்.பி.எப். நிர்வாகி ஞானதாஸ், சி.ஐ.டி.யு. நிர்வாகிகள் ஜெயா, பிராங்கிளின், ஜெயன், மாதர் சங்க மாவட்ட தலைவர் மேரி ஸ்டெல்லா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து

ஜன.30-ல் மேற்கு வங்காளம் செல்கிறார் அமித்ஷா

2047-ம் ஆண்டிற்குள் இந்தியாவில் 400 விமான நிலையங்கள்: பிரதமர் மோடி

7 முறை எம்.எல்.ஏ... அஜித் பவாரின் குடும்ப, அரசியல் வாழ்க்கை விவரம் வெளியீடு