தமிழக செய்திகள்

சென்னையில் நடைபெறும் போராட்டத்தில் பங்கேற்க தொழிற்சங்கத்தினர் முடிவு

சென்னையில் நடைபெறும் போராட்டத்தில் பங்கேற்க தொழிற்சங்கத்தினர் முடிவு செய்துள்ளனர்.

தினத்தந்தி

அரியலூர் மாவட்ட ஏ.ஐ.டி.யு.சி. சார்பில் மாவட்ட குழு கூட்டம், சங்க அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட துணைத்தலைவர் சிலம்புசெல்வி தலைமை தாங்கினார். மாவட்ட பொதுச்செயலாளர் தண்டபாணி அறிக்கை வாசித்தார். கூட்டத்தில், வருகிற 31-ந்தேதி சங்க அலுவலகத்தில் கொடியேற்றுவது. மத்திய அரசின் தொழிலாளர், விவசாயிகள், மக்கள் விரோத போக்குகளை கண்டித்து தொழிற்சங்கங்கள், ஐக்கிய விவசாயிகள் முன்னணி சார்பில் சென்னையில் நவம்பர் 26, 27, 28-ந் தேதிகளில் நடைபெறும் போராட்டத்தில் கலந்து கொள்வது. கிராம ஊராட்சி தூய்மை பணியாளர்கள், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி ஆபரேட்டர்கள் மற்றும் துப்புரவு பணியாளர்களின் பேரவைக்கூட்டம் நடத்துவது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் சங்கத்தை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்