தமிழக செய்திகள்

தொழிற்சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்

செங்கோட்டையில் தொழிற்சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தினத்தந்தி

செங்கோட்டை:

டி.ஆர்.இ.யூ. ரெயில்வே தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பில் செங்கோட்டை ரயில் நிலையம் அருகே உள்ள உதவி கோட்ட பொறியாளர் அலுவலகம் முன்பு மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது. கோட்ட பொருளாளர் சரவணன் தலைமை தாங்கினார். கோட்ட செயலாளர்கள் பெத்தராஜ், ஜீவா, உதவி செயலாளர்கள் ஜெயராமன், குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் ரயில்வே கேட்டுகளில் ஒப்பந்த அடிப்படையில் பணியாளர்களை நியமனம் செய்யக்கூடாது, ரயில் பயணிகளின் பாதுகாப்பில் அலட்சியம் காட்டாமல் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். நிரந்தர தொழிலாளர்களை கேட் பணியில் அமர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்பட 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். நிகழ்ச்சியில் புனலூர் கிளை சங்கத்தலைவர் பிரியேஸ்பாபு உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். செங்கோட்டை கிளைசெயலாளர் உண்ணிகிருஷ்ணன் நன்றி கூறினார்.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்