தமிழக செய்திகள்

தொழில் நஷ்டத்தால் வியாபாரி விஷம் குடித்து தற்கொலை

பெருந்துறை அருகே தொழில் நஷ்டத்தால் வியாபாரி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

தினத்தந்தி

கோவை மாவட்டம், நியூ சித்தாபுதூர் பகுதியை சேர்ந்த துரைசாமி. இவரது மகன் சந்தோஷ் (வயது 32). இவருக்கு திருமணமாகி சுகந்தா தேவி என்ற மனைவியும், ரிதக்ஷா (7), வெபினா (4) என்ற மகள்களும் உள்ளனர். கோவையில் வசித்து வரும் சந்தோஷ் பெருந்துறையில், கிரீன் பார்மர் என்ற பெயரில் டிராக்டர் எக்யூப்மென்ட் கடை வைத்து நடத்தி வருகிறார்.

இவர் தினமும் கோவையிலிருந்து கடைக்கு சென்று வர சிரமமாக இருந்ததால் பெருந்துறையி உள்ள, மாமனார் வீட்டில் இருந்து தினமும் கடைக்கு சென்று வந்துள்ளார். கடந்த நான்கைந்து மாதங்களாக வயிற்று வலி ஏற்பட்டு யாரிடமும் சொல்லாமல் மருத்துவ சிகிச்சை பெறாமல் வேலை செய்து வந்துள்ளார்.

டிராக்டர் கடையிலும் நஷ்டம் ஏற்பட்டதால் புலம்பிக் கொண்டிருந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் கடந்த ஐந்து தினங்களுக்கு முன்பு காலை பூச்சிக்கொல்லி மருந்தை குடித்துள்ளார். உடனடியாக அக்கம்பக்கத்தினர் மீட்டு அவரை ஈரோடு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு சிகிச்சை பெற்று வந்த சந்தோஷ் சிகிச்சை பலனின்றி நேற்று காலை பரிதாபமாக உயிரிழந்தார். இதுதொடர்பாக தகவல் அறிந்த பெருந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்