தமிழக செய்திகள்

லாரி சக்கரத்தில் சிக்கி வியாபாரி பலி

மாங்காடு அருகே லாரி சக்கரத்தில் சிக்கி வியாபாரி பலியானார்.

தினத்தந்தி

பூந்தமல்லி, 

மதுரவாயல் அடுத்த ஜெயராம் நகர் பகுதியில் வசித்து வந்தவர் ஞானபிரகாஷ் (வயது 23). இவர், கோயம்பேடு மார்க்கெட்டில் கருவேப்பிலை வியாபாரம் செய்து வந்தார். இவரது நண்பர் அஜீத் (22). இவர்கள் 2 பேரும் நேற்று மதியம் மாங்காடு அடுத்த சிக்கராயபுரத்தில் உள்ள கல்குவாரியில் குளித்துவிட்டு, மது போதையில் மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தனர். மாங்காடு அருகே சென்றபோது நிலை தடுமாறி 2 பேரும் மோட்டார்சைக்கிளில் இருந்து கீழே விழுந்தனர். அப்போது பின்னால் வந்த டிப்பர் லாரி, ஞானபிரகாஷ் மீது ஏறி இறங்கியது. லாரி சக்கரத்தில் சிக்கிய அவர், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அஜீத், லேசான காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

இதுபற்றி பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய லாரி டிரைவரை தேடி வருகின்றனர்.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது