தமிழக செய்திகள்

தக்கலை அருகே லாரி மோதி வியாபாரி பலி

தக்கலை அருகே லாரி மோதி வியாபாரி பலியானார்.

தினத்தந்தி

தக்கலை:

தக்கலை அருகே உள்ள கல்லக்குழி, நாராயணத்துவிளையை சர்ந்தவர் ஜஸ்டின் அருள்தாஸ் (வயது55), வியாபாரி. இவர் அந்த பகுதியில் பலசரக்கு கடை நடத்தி வந்தார். நேற்று மதியம் 2.30 மணிக்கு வேர்க்கிளம்பிக்கு செல்வதற்காக ஸ்கூட்டரில் புறப்பட்டார். முண்டவிளை பகுதியில் வந்த போது பின்னால் ஜல்லி ஏற்றி வந்து கொண்டிருந்த டிப்பர் லாரி, ஸ்கூட்டரை முந்தி சென்ற போது மோதியது. இதில் ஜஸ்டின் அருள்தாஸ் நிலைதடுமாறி சாலையில் விழுந்தார். அப்போது லாரியின் பின்பக்க சக்கரம் அவரது தலையில் ஏறி இறங்கியது. இதில் அவர் சம்பவ இடத்தில் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த கொற்றிக்கோடு போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய லாரி டிரைவரை தடி வருகிறார்கள். விபத்தில் பலியான ஜெஸ்டின் அருள்தாசுக்கு புஷ்பராணி என்ற மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். மகன், மகள் இருவருக்கும் திருமணமாகி விட்டது.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு