தமிழக செய்திகள்

ஸ்ரீபெரும்புதூர் பஜார் பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வியாபாரிகள் எதிர்ப்பு

ஸ்ரீபெரும்புதூர் பஜார் பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து வியாபாரிகள், போலீசார் மற்றும் வருவாய் துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

தினத்தந்தி

காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் பஸ்நிலையம் எதிரே 50-க்கும் மேற்பட்ட கடைகள் கட்டப்பட்டு உணவகம் உட்பட பல்வேறு கடைகள் உள்ளன. இந்த நிலையில் நேற்று ஸ்ரீபெரும்புதூர் நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர் தலைமையில் வந்த நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் போலீசார் பஜார் பகுதியில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட இடங்களை பொக்லைன் எந்திரம் உதவியுடன் அகற்றினர்.

எந்த ஒரு முன் அறிவிப்பும் தெரிவிக்காமல் நெடுஞ்சாலை துறையினர் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதாக கூறி வியாபாரிகள், போலீசார் மற்றும் வருவாய் துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். போலீசார் அவர்களை அப்புறப்படுத்தி ஆக்கிரமிப்புகளை அகற்றினர்.

ஆக்கிரமிப்பு அகற்றும் பணிக்கு போலீசார் அதிக அளவில் குவிக்கப்பட்டதால் ஸ்ரீபெரும்புதூர் பஜார் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து