தமிழக செய்திகள்

மழையால் வியாபாரிகள் கவலை

மழையால் வியாபாரிகள் கவலையடைந்துள்ளனர்.

தினத்தந்தி

அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் பகுதியில் கடந்த ஒரு வாரமாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இந்நிலையில் நேற்று மாலை வெயிலின் தாக்கம் குறைந்து குளிர்ந்த காற்று வீசத்தொடங்கியது. பின்னர் வானில் கருமேகம் சூழ்ந்து, மழை பெய்ய தொடங்கியது. இதில் உடையார்பாளையம், முனியத்தரியன்பட்டி, விளாங்குடி, ஆதிச்சனூர், சுத்தமல்லி, கழுமங்கலம், கச்சிப்பெருமாள், துலாரங்குறிச்சி, சூரியமணல், தத்தனூர், வெண்மாண்கொண்டான், மணகெதி, சோழங்குறிச்சி, அழிசிகுடி, பருக்கல், காடுவெட்டாங்குறிச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இந்த மழை மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை பெய்தது. இதனால் சாலையில் குளம்போல் மழைநீர் தேங்கியது. இந்த மழையால் தீபாவளி பொருட்கள் விற்பனை பாதிக்கப்படலாம் என்று வியாபாரிகள் கவலையுடன் தெரிவித்தனர்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்