தமிழக செய்திகள்

அரசு பள்ளியில் பாரம்பரிய உணவு திருவிழா

திருக்கடையூர் அருகே அரசு பள்ளியில் பாரம்பரிய உணவு திருவிழா நடந்தது.

திருக்கடையூர்:

திருக்கடையூர் அருகே சீவகசிந்தாமணியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பாரம்பரிய உணவு திருவிழா நடந்தது. இதற்கு ஊராட்சி மன்ற தலைவர் ஜெயமாலதி சிவராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட கவுன்சிலர் துளசி ரேகா ரமேஷ், பள்ளி உதவி ஆசிரியர் ஸ்ரீகாந்த் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி தலைமை ஆசிரியர் மகேஸ்வரி வரவேற்றார். இதில் மாணவ, மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பாரம்பரிய உணவுகளான புடி கொழுக்கட்டை, கேழ்வரகு கூழ், நவதானியங்கள், கம்பு, பயறு சுண்டல், கொண்டை கடலை சுண்டல் உள்ளிட்ட பல்வேறு வகையான உணவு பொருட்கள் தயாரித்து வைக்கப்பட்டிருந்தன. இதில் திரளான மாணவர்கள் கலந்து கொண்டனர். 

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்