தமிழக செய்திகள்

ஈகா சந்திப்பில் இருந்து சென்டிரல் நோக்கி இன்று இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை வாகனங்கள் செல்ல தடை - போக்குவரத்து போலீசார் அறிவிப்பு

மழைநீர் வடிகால் கட்டுமான பணிகள் நடப்பதால் இன்று இரவு 10 மணி முதல் செவ்வாய்க்கிழமை அதிகாலை 5 மணி வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.

தினத்தந்தி

சென்னை போக்குவரத்து போலீசார் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

ஈ.வெ.ரா.பெரியார் நெடுஞ்சாலையில் கீழ்ப்பாக்கம் தீயணைப்பு நிலையம் அருகில் மழைநீர் வடிகால் கட்டுமான பணிகள் நடப்பதால் இன்று (திங்கட்கிழமை) இரவு 10 மணி முதல் செவ்வாய்க்கிழமை அதிகாலை 5 மணி வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.

அதன்படி ஈகா சந்திப்பில் இருந்து சென்டிரல் நோக்கி ஈ.வெ.ரா.நெடுஞ்சாலையில் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்படுகிறது. இந்த வாகனங்கள் பர்னபி சாலை சந்திப்பில் இருந்து, இடதுபுறம் திரும்பி பிளவர்ஸ் சாலை வழியாக போக வேண்டும். ஆனால் அதே நேரத்தில் கெங்கு ரெட்டி சுரங்கப்பாதை சந்திப்பில் இருந்து ஈகா சந்திப்பு நோக்கி ஈ.வெ.ரா.நெடுஞ்சாலையில் வாகனங்கள் போக தடை இல்லை.

இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்