தமிழக செய்திகள்

தீபாவளி பண்டிகை: சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு படையெடுக்கும் மக்கள்

நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை வரும் 20ம் தேதி கொண்டாடப்பட உள்ளது.

தினத்தந்தி

நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை வரும் 20ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதனிடையே, சனி, ஞாயிறு வார விடுமுறை என்பதாலும் திங்கட்கிழமை தீபாவளி என்பதாலும் வெளியூர்களில் வசித்து வரும் மக்கள் இன்றே தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல தொடங்கியுள்ளனர்.

அந்த வகையில், சென்னையில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில், சென்னையில் இருந்து தென்மாவட்டங்கள் நோக்கி மக்கள் படையெடுத்து வருகின்றனர். கடந்த 33 மணிநேரத்தில் மட்டும் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சுங்கச்சாவடியை 46 ஆயிரத்து 172 வாகனங்கள் கடந்து சென்றுள்ளன.

ஒரேநாளில் கூடுதலாக 16 ஆயிரம் வாகனங்கள் தென்மாவட்டங்களை நோக்கி பயணம் மேற்கொண்டுள்ளன. தென்மாவட்டங்கள் நோக்கி அதிக வானங்கள் செல்வதால் சுங்கச்சாவடிகளில் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்