தமிழக செய்திகள்

போக்குவரத்து காவல் அபராத ரசீதை தமிழில் மாற்றாவிட்டால் திமுக சார்பில் போராட்டம் - மு.க.ஸ்டாலின்

போக்குவரத்து காவல் அபராத ரசீதை தமிழில் மாற்றாவிட்டால் திமுக சார்பில் போராட்டம் நடத்தப்படும் என்று மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தினத்தந்தி

புதுக்கோட்டை,

தமிழகத்தில், போக்குவரத்து விதிகளை மீறுவோருக்கு அபராதம் விதிக்கும் ரசீதை தமிழில் மாற்றாவிட்டால் திமுக சார்பில் போராட்டம் நடத்தப்படும் என்று அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் திமுக பிரமுகர் இல்ல திருமண விழாவில் மு.க.ஸ்டாலின் பங்கேற்று உரையாற்றினார். அப்போது, போக்குவரத்து துறையில் அபராத கட்டணத்துக்காக வழங்கப்படும் ரசீது விவரங்கள் தமிழில் இல்லை என்று குற்றஞ்சாட்டினார். இதனை மாற்ற அரசு உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஆங்கிலத்தில் உள்ள ரசீதை தமிழில் மாற்றாவிட்டால் திமுக சார்பில் பெரிய போராட்டம் நடத்தப்படும் என்று மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்தார்.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்