தமிழக செய்திகள்

கள்ளக்குறிச்சி நான்கு முனை சந்திப்பில் ரூ.5½ லட்சத்தில் போக்குவரத்து சிக்னல் கலெக்டர் ஷ்ரவன்குமார் இயக்கி வைத்தார்

கள்ளக்குறிச்சி நான்கு முனை சந்திப்பில் ரூ.5½ லட்சத்தில் போக்குவரத்து சிக்னல் கலெக்டர் ஷ்ரவன்குமார் இயக்கி வைத்தார்

தியாகதுருகம், 

கள்ளக்குறிச்சி நான்கு முனை சந்திப்பில் ரூ.5 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பில் போக்குவரத்து சிக்னல் அமைக்கப்பட்டு அதனை பயன்பாட்டுக்கு கொண்டு வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மோகன்ராஜ் முன்னிலை வகித்தார். மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார் தலைமை தாங்கி போக்குவரத்து சிக்னலை இயக்கி வைத்தார். இதில் துணை போலீஸ் சூப்பிரண்டு ரமேஷ், போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன், போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் இளையராஜா, போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சத்தியசீலன் மற்றும் போலீசார் பலர் கலந்து கொண்டனர். இதன் மூலம் துருகம் சாலை, சேலம் மெயின் ரோடு, காந்தி ரோடு, கச்சேரி சாலை ஆகிய சாலைகளில் போக்குவரத்து நெரிசலை கட்டுக்குள் கொண்டு வர முடியும் என போக்குவரத்து போலீசார் தெரிவித்தனர். 

SCROLL FOR NEXT