தமிழக செய்திகள்

காதல் திருமணம் செய்த 6 மாதத்தில் ஏரியில் மூழ்கி வாலிபர் பலி கச்சிராயப்பாளையம் அருகே சோகம்

கச்சிராயப்பாளையம் அருகே காதல் திருமணம் செய்த 6 மாதத்தில் ஏரியில் மூழ்கி வாலிபர் உயிரிழந்தார்.

தினத்தந்தி

கச்சிராயப்பாளையம், 

கச்சிராயப்பாளையம் அருகே கோமுகி அணை குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் பாண்டியன் மகன் அரவிந்தன் (வயது 19). இவர் தெங்கியாநத்தம் கிராமத்தை சேர்ந்த விவினா என்பவரை காதலித்து கடந்த 6 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் அரவிந்தன் நேற்று காலை கச்சிராயப்பாளையம் அருகே கடத்தூர் ஏரியில் மீன் பிடிப்பதற்காக தனது நண்பர்களுடன் சென்றார். ஏரியில் இறங்கி மீன் பிடித்துக்கொண்டிருந்தபோது, அரவிந்தன் திடீரென தண்ணீரில் மூழ்கினார். இதைபார்த்து அதிர்ச்சியடைந்த நண்பர்கள் விரைந்து சென்று அவரை தேடும் பணியில் ஈடுபட்டனர். இதில் நீண்ட நேர போராட்டத்துக்கு பின்னர் அரவிந்தன் பிணமாக மீட்கப்பட்டார். இதற்கிடையே இதுபற்றி தகவல் அறிந்த கச்சிராயப்பாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அரவிந்தன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காதல் திருமணம் செய்த 6 மாதத்தில் புதுமாப்பிள்ளை ஏரியில் மூழ்கி இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து

ஜன.30-ல் மேற்கு வங்காளம் செல்கிறார் அமித்ஷா

2047-ம் ஆண்டிற்குள் இந்தியாவில் 400 விமான நிலையங்கள்: பிரதமர் மோடி

7 முறை எம்.எல்.ஏ... அஜித் பவாரின் குடும்ப, அரசியல் வாழ்க்கை விவரம் வெளியீடு

காரைக்காலில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை