விழுப்புரம்,
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே சாலையோர கிணற்றில் கார் விழுந்த விபத்தில் சிக்கி 3 பேர் உயிரிந்துள்ளனர்.
முன்னதாக திருவண்ணாமலையில் கிரிவலம் முடித்துக்கொண்டு 4 வழக்கறிஞர்கள் சென்னை திருப்பி உள்ளனர். அப்போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோர கிணற்றில் விழுந்ததில் வழக்கறிஞர்கள் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
கார் ஓட்டியவர் தூக்க கலகத்தில் இருந்ததால் விபத்து நேரிட்டதாக கூறப்படுகிறது. சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் அளித்த தகவலின் பேரில் விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர், 3 பேரின் உடல்களை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மற்றொருவரை தேடும் பணி நடைபெற்று வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.