தமிழக செய்திகள்

கோவிலுக்கு சுற்றுலா சென்று திரும்பியபோது பரிதாபம்: ஆம்னி பஸ் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து - 2 பெண்கள் சாவு

கோவிலுக்கு சுற்றுலா சென்று திரும்பியபோது ஆம்னி பஸ் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.இந்த விபத்தில் 2 பெண்கள் உயிரிழந்தார்.

தினத்தந்தி

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சீபுரம் பகுதியை சேர்ந்த 43 பேர் குடும்பமாக தனியார் சொகுசு ஆம்னி பஸ்சில் 4 நாட்கள் தென்மாவட்டத்தில் உள்ள ராமேசுவரம், கன்னியாகுமரி, மதுரை, திருச்சி, உள்ளிட்ட இடங்களில் உள்ள கோவிலுக்கு சுற்றுலா சென்றனர். 4 நாட்கள் சுற்றுலா முடித்துவிட்டு மீண்டும் சென்னையை நோக்கி வந்து கொண்டு இருந்தனர்.

நேற்று அதிகாலை 3 மணியளவில் மதுராந்தகம் அருகே திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் மேலவளம்பேட்டை என்ற இடத்தில் வந்து கொண்டு இருந்த போது, திடீரென பஸ் கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரத்தில் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்தது.

இந்த விபத்தில் பஸ்சில் பயணம் செய்த சென்னை திருவான்மியூரை சேர்ந்த நாதிஷா (வயது 50) என்பவர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார். இதுபற்றி தகவல் அறிந்து வந்த மதுராந்தகம் போலீசார் விபத்தில் படுகாயம் அடைந்த 42 பேரை மீட்டு சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிசிச்சை பலனின்றி சென்னை திருவான்மியூரை சேர்ந்த டில்லிராணி(50) என்பவரும் உயிரிழந்தார். காயமடைந்தவர்களுக்கு செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து மதுராந்தகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை