தமிழக செய்திகள்

ரெயில் என்ஜின் டிரைவர்கள் ஆர்ப்பாட்டம்

ரெயில் என்ஜின் டிரைவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினாகள்.

தினத்தந்தி

அகில இந்திய ரெயில் ஓட்டுனர்கள் சங்கத்தின் சேலம் கோட்டம் சார்பில், ஈரோடு ரெயில் நிலையத்தில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு சேலம் கோட்ட செயலாளர் சிவகுமார் தலைமை தாங்கினார். தலைவர் அருண்குமார் முன்னிலை வகித்தார்.

ரெயில் ஓட்டுனர்களுக்கு விருப்ப பணியிட மாறுதல் உத்தரவு வந்து 6 மாதங்கள் ஆகியும் அனுப்பப்படாமல் உள்ளனர். அவர்களை உடனடியாக அனுப்பி வைக்க வேண்டும். சரக்கு வண்டி ஓட்டுனர்களை 36 மணி நேரத்தில் வீட்டுக்கு அனுப்பிவிட வேண்டும். தொழிலாளர் விரோத போக்கினை கடைபிடிக்கும் சேலம் ரெயில் ஓட்டுனர்களின் கட்டுப்பாட்டாளரை உடனடியாக பதவி நீக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட ரெயில் என்ஜின் டிரைவர்கள் கோரிக்கைகள் குறித்து கோஷங்கள் எழுப்பினார்கள்.

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை