தமிழக செய்திகள்

ரயிலில் அடிபட்டு கதிர் அடிக்கும் எந்திர டிரைவர் சாவு

திருவிடைமருதூர் அருகே ரயிலில் அடிபட்டு கதிர் அடிக்கும் எந்திர டிரைவர் உயிரிழந்தார்.

தினத்தந்தி

திருவிடைமருதூர்;

கும்பகோணம் அருகே திருவிடைமருதூர் வடகரை சாரக்குளம் பகுதியைச் சேர்ந்தவா சுபாஷ். இவருடைய மகன் ஹரிகிருஷ்ணன் (வயது24). விவசாய கதிர் அடிக்கும் எந்திர டிரைவரான இவருக்கு திருமணமாகி 2 வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது. இவர் நேற்று காலை திருவிடைமருதூர் ரயில் நிலையத்துக்கும் ஆடுதுறை ரயில் நிலையத்துக்கும் இடையில் தண்டவாளத்தில் அதிகாலை சென்ற ரயிலில் அடிபட்டு இறந்து கிடந்தார். இது குறித்து தகவல் அறிந்ததும் கும்பகோணம் ரயில்வே போலீசார் ஹரிகிருஷ்ணன் உடலை கைப்பற்றி விசாரணை நடத்திவருகிறர்கள். 

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு