தமிழக செய்திகள்

ஆவடி ரெயில் நிலையத்தில் மின்சார ரெயில் தடம் புரண்டது ரெயில் சேவை பாதிப்பு

ஆவடி ரெயில் நிலையத்தில் மின்சார ரெயில் பெட்டிகள் 2 தடம் புரண்டதால் அந்த மார்க்கத்தில் மின்சார ரெயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.

சென்னை

ஆவடி ரெயில் நிலையத்தில் பட்டாபிராம் சைடிங் ரெயில் நேற்று இரவு தடம் புரண்டது . இதனால் அந்த பாதையில் ரெயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது

இதனால் மூர் மார்க் கெட் - ஆவடி மார்க்கத்தில் 11 மின்சார ரெயில்கள் முழுவதும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

ரெயில் எண் 6600 ஆவடி- மூர்மார்க்கெட், எண் 66025 மூர்மார்க்கெட்- சூலூர் பேட்டை, எண். 66029 சூலூர்பேட்டை- நெல்லூர், எண். 66030 நெல்லூர்-சூலூர்பேட்டை செல்லும் மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

எண். 66025 சுலூர் பேட்டை-மூர் மார்க்கெட், எண். 66002 ஆவடி- மூர் மார்க்கெட், 66015 மூர் மார்க்கெட்- அரக்கோணம், எண். 66039 அரக்கோணம்- திருப்பதி, எண். 66033 திருப்பதி-நெல்லூர், எண். 66036 நெல்லூர்- மூர் மார்க்கெட், எண். 66003 மூர் மார்க்கெட்- ஆவடி ஆகிய மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

இருப்பினும் மூர் மார்க் கெட்டில் இருந்து பயணிகள் சிறப்பு ரெயில் 30 நிமிட இடைவெளியில் திருத்தணி, திருவள்ளூர், பட்டாபிராம் மிலிட்டரி சைடிங் மற்றும் அரக்கோணம் ஆகிய பகுதிகளுக்கு காலை 10 மணி வரை இயக்கப்பட்டது என்று தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.