தமிழக செய்திகள்

பயிற்சி வகுப்பு

பயிற்சி வகுப்பு வெம்பக்கோட்டையில் நடைபெற்றது.

தினத்தந்தி

தாயில்பட்டி, 

வெம்பக்கோட்டை தாலுகாவிற்கு உட்பட்ட கிராமங்களில் கலைஞர் மகளிர் உரிமை தொகை வழங்குவது தொடர்பான பயிற்சி வகுப்பு வெம்பக்கோட்டையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு வெம்பக்கோட்டை வட்டாட்சியர் ரெங்கநாதன் தலைமை தாங்கினார். தனி வட்டாட்சியர் ராமசுப்பிரமணியன் முன்னிலை வகித்தார்.

மண்டலத்துணை வட்டாட்சியர் ராஜமோகன், வட்ட வழங்கல் அலுவலர் திருப்பதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்யும் இல்லம் தேடி தன்னார்வலர்கள், விண்ணப்பங்கள் சரிபார்க்கும் பணியில் மேற்கொண்டுள்ள மகளிர் சுய உதவிக் குழுவினர், விண்ணப்பம் வினியோகம் செய்யும் ரேஷன் கடை விற்பனையாளர்கள், முகாம் மேற்பார்வையாளர், மண்டல அலுவலர், முகாம் அலுவலர், வருவாய் அலுவலர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் ஆகியோர் பயிற்சியில் கலந்து கொண்டனர்.

முடிவில் தனி துணை வட்டாட்சியர் (தேர்தல்) ரவிச்சந்திரன் நன்றி கூறினார்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து