தமிழக செய்திகள்

தேர்தல் அலுவலர்களுக்கு பயிற்சி; தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு துவக்கி வைத்தார்

தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்புகளை தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு இன்று துவக்கி வைத்தார்.

சென்னை,

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அரசியல் கட்சியினர் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதே வேளையில் தேர்தல் நடத்துவதற்கான ஆயத்த பணிகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக 16 மாவட்டங்களுக்கான தேர்தல் நடத்தும் அதிகாரிகளுக்கு தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு இன்று சென்னையில் பயிற்சி வகுப்புகளை துவக்கி வைத்தார். தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்புகள் இன்று முதல் நான்கு நாட்கள் நடைபெற உள்ளது.

இந்த வகுப்புகளை துவக்கி வைத்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சட்டமன்ற தேர்தலில் நூறு சதவீத வாக்குப்பதிவை ஏற்படுத்த திரை பிரபலங்களை கெண்டு விழிப்புணர்வு பிரசாரம் மேற்கெள்ளப்படும் என்றார். மேலும் சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவின் பேது, உடல்நலம் பாதிக்கப்பட்டவர்களுக்காக ஒரு மணி நேரம் பிரத்தியேகமாக ஒதுக்கப்பட்டு வாக்களிக்க ஏற்பாடு செய்யப்படும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...