தமிழக செய்திகள்

காட்டுப்பன்றி, குரங்குகளை கட்டுப்படுத்துவது குறித்து பயிற்சி

காட்டுப்பன்றி, குரங்குகளை கட்டுப்படுத்துவது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.

தினத்தந்தி

திருப்பத்தூர் மாவட்டம் மாதனூர் வட்டார வேளாண்மை உழவர் நலத்துறை சார்பில் குளிதிகைஜமீன் பகுதியில் நேற்று வேளாண்மை தொழில்நூட்ப மேலாண்மை முகமை மூலம் காட்டுப்பன்றிகள், குரக்குகள், மற்றும் எலிகளை கட்டுப்படுத்துவது குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி நடந்தது. மாதனூர் ஒன்றியக் குழு தலைவர் சுரேஷ்குமார் கலந்து கொண்டு பூச்சிக்கொல்லி தெளிப்பான் மற்றும் நடவு எந்திரம் வழங்கி சிறப்புறையாற்றினார்.

நிகழ்ச்சியில் மாதனூர் ஒன்றியக்குழு துணைத் தலைவர் சாந்திசீனிவாசன், மாவட்டக் குழு உறுப்பினர் சசிகலா சாந்தகுமார், ஒன்றியக் குழு உறுப்பினர் மனோரஞ்தம்ரவி, கோமதிவேலு, கார்த்திக்ஜவகர், ஊராட்சி மன்ற தலைவர் குணசுந்தரி, வேளாண்மை துணை இயக்குனர் பச்சையப்பன், உதவி இயக்குனர் பாஸ்கரன், தோட்டக்கலை உதவி இயக்குனர் விக்னேஷ், வனச்சரக அலுவலர்கள், விவசாயிகள் கலந்து கொண்டனர்.

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து

ஜன.30-ல் மேற்கு வங்காளம் செல்கிறார் அமித்ஷா

2047-ம் ஆண்டிற்குள் இந்தியாவில் 400 விமான நிலையங்கள்: பிரதமர் மோடி

7 முறை எம்.எல்.ஏ... அஜித் பவாரின் குடும்ப, அரசியல் வாழ்க்கை விவரம் வெளியீடு