தமிழக செய்திகள்

பயிற்சி பட்டறை

தெற்கு கள்ளிகுளம் தட்சணமாற நாடார் சங்க கல்லூரியில் பயிற்சி பட்டறை நடந்தது.

தினத்தந்தி

தெற்கு கள்ளிகுளம் நெல்லை தட்சணமாற நாடார் சங்க கல்லூரியின் தமிழ்த்துறை சுயநிதிப்பிரிவு மற்றும் கிராமியக்கலை இலக்கிய மன்றம் இணைந்து 'தோற்பாவை கூத்தும் தமிழர் மரபும்' என்ற தலைப்பில் ஒரு நாள் பயிற்சி பட்டறையை நடத்தியது. கல்லூரி செயலாளர் மற்றும் தாளாளர் ராமநாதன் தலைமை தாங்கினார். முதல்வர் ராஜன், தமிழ்த்துறை தலைவர் கிரிஜா ஆகியோர் வரவேற்றனர். கல்லூரிக்குழு உறுப்பினர் காமராஜ் வாழ்த்தி பேசினார். கன்னியாகுமரி தோற்பாவை கூத்து கலைஞர் முத்துசந்திரன் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். மேலும் அவர், கல்வியின் சிறப்பு மற்றும் கம்பராமாயணத்தில் சுந்தர காண்டம் ஆகியவற்றை தோற்பாவை கூத்து மூலமாக நிகழ்த்தி காட்டினார். மாணவர்களின் கலந்துரையாடல் நடைபெற்றது. பின்னர் பயிற்சி பட்டறையில் பங்கேற்றவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. முடிவில், பேராசிரியர் முருகவேல் நன்றி கூறினார். விழா ஏற்பாடுகளை தமிழ்த்துறை பேராசிரியர்கள் சோனா கிறிஸ்டி, சித்ரா, கிரோஸ் புஷ்ப ஜூலியட் ஆகியோர் செய்திருந்தனர். கல்லூரி பேராசிரியர்கள், அலுவலர்கள், மாணவ-மாணவிகள் கலந்துகொண்டனர்.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்