தமிழக செய்திகள்

அழகப்பா கல்லூரியில் பயிற்சி பட்டறை

காரைக்குடி அழகப்பா அரசு கலைக்கல்லூரி வணிகவியல் துறை மற்றும் அழகப்பா பல்கலைக்கழகம் சார்பில் தொழில் முனைவோருக்கான சிறப்பு பயிற்சி பட்டறை முகாம் நடைபெற்றது

தினத்தந்தி

காரைக்குடி

காரைக்குடி அழகப்பா அரசு கலைக்கல்லூரி வணிகவியல் துறை மற்றும் அழகப்பா பல்கலைக்கழகம் சார்பில் தொழில் முனைவோருக்கான சிறப்பு பயிற்சி பட்டறை முகாம் நடைபெற்றது. கல்லூரி முதல்வர் பெத்தாலெட்சுமி தலைமை தாங்கினார். வணிகவியல் துறைத்தலைவர் லதா வரவேற்றார். பொறுப்பு முதல்வர் வெங்கடேசன் தலைமை உரையாற்றினார். விழாவில் அழகப்பா பல்கலைக்கழக இ.டி.ஐ. இயக்குனர் வேதிராஜன் மற்றும் இ.டி.ஐ. ஒருங்கிணைப்பாளர் அருமை ரூபன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டு பேசினர். நிகழ்ச்சியில் அழகப்பா அரசு கலைக் கல்லூரி 3-வது ஆண்டு வணிகவியல் மாணவ-மாணவிகள் மற்றும் பேராசிரியர்கள் கலந்துகொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை வணிகவியல் துறை பேராசிரியர் ரமேஷ் செய்திருந்தார். 

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்