தமிழக செய்திகள்

தொடர் மழையால் சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையங்களுக்கு வரக்கூடிய ரயில்கள் தாமதம்

சென்னையில் பெய்து வரும் தொடர் மழையால் செண்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையங்களுக்கு வரக்கூடிய ரயில்கள் தாமதம் ஆகியுள்ளன.

தினத்தந்தி

சென்னை,

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. இதனால் கடலோர மாவட்டங்களில் கனமழை கொட்டி தீர்க்கிறது. சில உள் மாவட்டங்களிலும் மழை பெய்து வருகிறது. கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையால் சென்னை உள்ளிட்ட சில மாவட்டங்கள் மழை வெள்ளத்தில் மிதக்கின்றன.

கனமழை மேலும் நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்து உள்ளது.

கனமழை காரணமாக சென்னையில், சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையங்களுக்கு வரக்கூடிய ரயில்கள் தாமதம் ஆகியுள்ளது. தண்டவாளங்களில் மழைநீர் தேங்கி நிற்பதால் மின்சார ரயில்கள் தாமதமாக இயக்கப்படுகின்றன. இதனால்,பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது