தமிழக செய்திகள்

போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் 20 பேர் இடமாற்றம்

போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் 20 பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

தினத்தந்தி

போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் 20 பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இடமாற்றம்

ஈரோடு மாவட்டத்தில் 3 ஆண்டுகளுக்கு மேலாக ஒரே போலீஸ் நிலையத்தில் பணியாற்றிய போலீசார் இடமாற்றம் செய்யப்படுவது வழக்கம்.

அதன்படி, ஈரோடு தாலுகா போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றிய துரைசாமி அறச்சலூர் போலீஸ் நிலையத்துக்கும், ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றிய கந்தசாமி கடத்தூர் போலீஸ் நிலையத்திற்கும், கருங்கல்பாளையம் போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றிய மோகன்ராஜ் கவுந்தப்பாடி போலீஸ் நிலையத்திற்கும், பவானி போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றிய அசோகன் கருங்கல்பாளையம் போலீஸ் நிலையத்திற்கும் இட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

சித்தோடு

மேலும் சித்தோடு போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றிய ஆர்.துரைசாமி ஈரோடு அரசு ஆஸ்பத்திரி போலீஸ் நிலையத்திற்கும், வரப்பாளையம் போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றிய முருகசாமி ஈரோடு சமூக நீதி மற்றும் மனித உரிமை பிரிவுக்கும், ஈரோடு கட்டுப்பாட்டுறை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நந்திஸ்வரன் அம்மாபேட்டை போலீஸ் நிலையத்திற்கும், சத்தி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றிய வாசுகி ஈரோடு நில அபகரிப்பு தடுப்பு பிரிவுக்கும் என மொத்தம் 20 சப்-இன்ஸ்பெக்டர்கள் ஈரோடு மாவட்டத்தில் ஒரே நாளில் இட மாற்றம் செய்து ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் உத்தரவிட்டுள்ளார்.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்