கோப்புப்படம்  
தமிழக செய்திகள்

தமிழகத்தின் முக்கிய நகரங்களை சேர்ந்த 9 டிஎஸ்பி-க்கள் இடமாற்றம்

தமிழகத்தின் முக்கிய நகரங்களை சேர்ந்த 9 டிஎஸ்பிக்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

தினத்தந்தி

சென்னை,

தமிழகத்தின் முக்கிய நகரங்களை சேர்ந்த 9 டிஎஸ்பிக்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி, திருச்சி கூடுதல் காவல் கண்காணிப்பாளராக இருந்த எஸ்.குத்தாலிங்கம் கள்ளக்குறிச்சி கூடுதல் காவல் கண்காணிப்பாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். தமிழ்நாடு காவல் அகாடமி கூடுதல் காவல் கண்காணிப்பாளராக முத்துமாணிக்கம் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

ராஜபாளையம் துணை காவல் கண்காணிப்பாளராக ப்ரீத்தி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். வேலூர் துணை காவல் கண்காணிப்பாளராக வேல்முருகன் நியமிக்கப்பட்டுள்ளார். நெல்லை புறநகர் சப்-டிவிஷன் காவல் டிஎஸ்பியாக இருந்த பாலசுந்தரம் மதுரை காவல் மாவட்ட ஊமச்சிக்குளம் சப்-டிவிஷன் டிஎஸ்பியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

தாம்பரம் காவல் ஆணையராக எஸ்பிசிஐடி டிஎஸ்பியாக இருந்த இளஞ்செழியன் மணிமங்கலம் காவல் உதவி ஆணையராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். 

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து