நெல்லை, ஜூலை.14-
நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் 29 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.
இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம்
நெல்லை மாவட்டம் கங்கைகொண்டான் போலீஸ் இன்ஸ்பெக்டர் பெருமாள் விக்கிரமசிங்கப்புரத்திற்கும், விக்கிரமசிங்கபுரம் இன்ஸ்பெக்டர் சீதாலட்சுமி, கங்கைகொண்டானுக்கும், உவரி இன்ஸ்பெக்டர் செல்வி, நாங்குநேரிக்கும், நாங்குநேரி இன்ஸ்பெக்டர் காளியப்பன் கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளைக்கும், சுத்தமல்லி இன்ஸ்பெக்டர் ஜீன்குமார் விஜயநாராயணத்திற்கும் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.
நெல்லை மாவட்ட ஆவண காப்பக இன்ஸ்பெக்டர் ஆதிலட்சுமி சுத்தமல்லிக்கும், விஜயநாராயணம் இன்ஸ்பெக்டர் அசோகன், தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாட்டுக்கும், சேரன்மாதேவி இன்ஸ்பெக்டர் சுகாதேவி கோவில்பட்டி மேற்குக்கும், களியக்காவிளை இன்ஸ்பெக்டர் எழிலரசி பாளையங்கோட்டை தாலுகாவுக்கும், நெல்லை மாவட்ட குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் ரமா, கொல்லங்கோட்டிற்கும், கன்னியாகுமரி அனைத்து மகளிர் இன்ஸ்பெக்டர் சொர்ணராணி, புளியங்குடி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கும், ஆலங்குளம் இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் தாழையூத்துக்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
திண்டுக்கல் இன்ஸ்பெக்டர் ஹேமலதா கரிவலம்வந்தநல்லூருக்கும், தாழையூத்து இன்ஸ்பெக்டர் பத்மநாபபிள்ளை, செய்துங்கநல்லூருக்கும், நாங்குநேரி குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் பிரேமா உவரிக்கும், கடையநல்லூர் இன்ஸ்பெக்டர் விஜயகுமார் சேரன்மாதேவிக்கும் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
பதவி உயர்வு
கன்னியாகுமரி மாவட்டத்தில் சப்-இன்ஸ்பெக்டர் சுபாஷ்ராஜன் பதவி உயர்வு பெற்று கடையநல்லூர் இன்ஸ்பெக்டராகவும், நெல்லை மாநகர நுண்ணறிவு பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் மகேஷ்குமார் பதவி உயர்வு பெற்று ஆலங்குளம் இன்ஸ்பெக்டராகவும், தூத்துக்குடி சப் இன்ஸ்பெக்டர் முத்து நெல்லை மாவட்ட தீவிர குற்றத்தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டராகவும், விருதுநகர் சப்-இன்ஸ்பெக்டர் சசிகுமார் தென்காசி மாவட்ட தீவிர குற்றத்தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டராகவும் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் மொத்தம் 29 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.
இதற்கான உத்தரவை நெல்லை சரக போலீஸ் டி.ஐ.ஜி. பிரவேஷ்குமார் பிறப்பித்துள்ளார்.