தமிழக செய்திகள்

தமிழகத்தில் உயர் போலீஸ் அதிகாரிகள் மாற்றம் - தலைமை தேர்தல் ஆணையம் உத்தரவு

தமிழகத்தில் சில உயர் போலீஸ் அதிகாரிகளை மாற்றி நேற்று தலைமை தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.

சென்னை,

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தேர்தல் ஆணையம் பல்வேறு ஆயத்தப்பணிகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் சில உயர் போலீஸ் அதிகாரிகளை மாற்றி நேற்று தலைமை தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.

அதன்படி தேர்தல் ஆணையம் வெளியிட்ட அதிகாரிகள் மாற்றம் பற்றிய விவரம் வருமாறு:-

* அருண்- திருச்சி போலீஸ் கமிஷனராக நியமிக்கப்பட்டார். திருச்சி போலீஸ் கமிஷனராக பணியாற்றிய லோகநாதன் ஏற்கனவே மாற்றப்பட்டார்.

* அமல்ராஜ்- மேற்கு மண்டல ஐ.ஜி.யாக பொறுப்பு ஏற்பார். மேற்கு மண்டல ஐ.ஜி. தினகரன் அங்கிருந்து மாற்றப்பட்டார்.

* தீபக் எம் தாமோர்- மத்திய மண்டல ஐ.ஜி.யாக பதவி ஏற்பார். மத்திய மண்டல ஐ.ஜி. ஜெயராம் மாற்றப்பட்டார்.

* செல்வநாகரத்தினம்- கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக நியமிக்கப்பட்டுள்ளார். அங்கு சூப்பிரண்டாக பணியாற்றிய அருள்அரசு மாற்றப்பட்டார். மாற்றப்பட்டுள்ள ஜெயராம், தினகரன், அருள் அரசு ஆகியோருக்கு தேர்தல் ஆணையத்தின் அனுமதி பெற்று வேறு பணி கொடுக்க வேண்டும் என்றும் தமிழக அரசுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்