தமிழக செய்திகள்

திருநங்கைகளுக்கு கொரோனா நிவாரண நிதியுதவியாக ரூ.2000 வழங்கப்படும் - தமிழக அரசு

திருநங்கைகளுக்கு கொரோனா நிவாரண நிதியுதவியாக ரூ.2000 வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

தினத்தந்தி

சென்னை,

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டிருப்பதாவது:-,

"கொரோனா பேரிடர் காலத்தில் வாழ்வாதாரத்தை இழந்த அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு உதவி தொகையாக 4000 ரூபாய் வழங்க முடிவு செய்து முதல் தவணையாக 2000 ரூபாய் வழங்கப்பட்டது. அதில் குடும்ப அட்டை வைத்திருந்த 2956 திருநங்கைகளுக்கும் வழங்கப்பட்டது.

இந்நிலையில், குடும்ப அட்டை இல்லாத தங்களுக்கும் வழங்க வேண்டும் என திருநங்கைகள் தரப்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கில் ,விடுபட்ட திருநங்கைகளுக்கும் நிதி உதவி வழங்க தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இதையடுத்து ஏற்கனவே குடும்ப அட்டை உள்ள திருநங்கைகள் 2,956 பேருக்கு நிதி வழங்கியது போக எஞ்சிய 8,493 திருநங்கைகளுக்கும் நிதி வழங்க அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. 8,493 திருநங்கைகளுக்கு தலா 2000 ரூ வழங்க 1 கோடியே 69 லட்சத்து 86 ஆயிரம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது".

இவ்வாறுஅந்த அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?