சென்னை,
தமிழக ஆளுநரும், பல்கலைக்கழகங்களின் வேந்தருமான பன்வாரிலால் புரோகித்துக்கு, அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாரி எழுதியுள்ள கடிதத்தில், தமிழக உயர்கல்வித்துறையில் எண்ணற்ற பல பிரச்சினைகள் உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
கல்வியில் தரமில்லாதது, வேலை வாய்ப்பின்மை, ஊழல் உள்ள பல்வேறு பிரச்சினைகள் உயர்கல்வித்துறையில் இருப்பதாக பாலகுருசாமி தெரிவித்துள்ளார். பொறியியல் படிப்பை முடிப்பவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதில் தமிழகம் 17-வது இடத்தில் இருப்பதாகவும், வளர்ச்சியடைந்து வரும் மாநிலங்களை விட தமிழகம் பின்னுக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் பாலகுருசாமி சுட்டிக்காட்டியுள்ளார்.
பல்கலைக்கழக துணைவேந்தர்கள் நியமனத்தில் வெளிப்படையான நடவடிக்கைகள் தொடர்ந்து கடைப்பிடிக்கப்பட வேண்டும் என்றும் பல்கலைக்கழக மானியக்குழு வகுத்துள்ள விதிமுறைகளை முறையாக பின்பற்றி துணைவேந்தர் தேர்வு செய்யப்பட வேண்டும் என்றும் பாலகுருசாமி தனது கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.