கோப்புப்படம் 
தமிழக செய்திகள்

போக்குவரத்து ஊழியர்கள் விடுப்பு: கிளை மேலாளரின் அனுமதி அவசியம் - போக்குவரத்துத் துறை அறிவுறுத்தல்

போக்குவரத்து ஊழியர்கள் ஒரு நாள் விடுப்பு எடுத்தாலும் கிளை மேலாளரிடம் அனுமதி பெறுவது அவசியம் என்று போக்குவரத்துத் துறை அறிவுறுத்தியுள்ளது.

தினத்தந்தி

சென்னை,

பேக்குவரத்துக் கழக ஊழியர்கள் ஒரு நாள் விடுப்பு எடுத்தாலும் கிளை மேலாளரிடம் அனுமதி பெறுவது அவசியம் என்று போக்குவரத்துத் துறை அறிவுறுத்தியுள்ளது.

ஊழியர்களுக்கு விடுப்பு வழங்குவது தொடர்பாக கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள் குறித்து பல அறிவுறுத்தல்கள் ஏற்கெனவே வழங்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் ஊழியர்கள் விடுப்பு தொடர்பான நடைமுறைகள் சரியாக கடைபிடிக்கப்படாததால் போக்குவரத்துத்துறை இந்த அறிவுறுத்தலை வழங்கியுள்ளது.

அதன்படி, பேக்குவரத்துக் கழகத்தில் பணிபுரியும் ஊழியர்கள் ஒரு நாள் விடுப்பு எடுத்தாலும் கிளை மேலாளர்களிடம் அனுமதி பெற வேண்டியது அவசியம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் போக்குவரத்துத்துறையில் உள்ள அனைத்து கிளை மேலாளர்கள் மற்றும் மண்டல மேலாளர்கள் இதில் தனி கவனம் செலுத்தி விடுப்பு வழங்கும் முறையை நெறிப்படுத்த வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு