விருதுநகர் போக்குவரத்து கழக பணிமனை முன்பு சி.ஐ.டி.யூ. போக்குவரத்து கழக தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்திற்கு மண்டல தலைவர் சுந்தரராஜன் தலைமை தாங்கினார். ஒப்பந்த தொழிலாளர் நியமனத்தை கைவிட வேண்டும். போதுமான தொழிலாளர்கள் நியமனம் செய்ய வேண்டும். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு அகவிலைப்படி உயர்வை வழங்க வேண்டும். போக்குவரத்து கழகத்தில் வரவு செலவுக்கான வித்தியாசத்தை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் குறித்து ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.