சென்னை,
அமைச்சருடனான பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததை அடுத்து போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தம் பல்வேறு பகுதிகளில் தொடங்கி உள்ளது. சென்னை பல்லவன் இல்லத்தில் மாநகர பேருந்துகள் ஓடாது என பேருந்து கண்ணாடிகளில் ஊழியர்கள் எழுதி வருகின்றனர். இதற்கிடையே பல்லவன் இல்லத்தில் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருடன் போக்குவரத்து தொழிற்சங்க நிர்வாகிகள் மீண்டும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு உள்ளனர். போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்ததை முன் கூட்டியே தொடங்கிய நிலையில்,
பேருந்துகளை சேதப்படுத்துவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை மாநகர போலீஸ் எச்சரிக்கை விடுத்து உள்ளது. சென்னையில் 15 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். சட்டம் ஒழுங்கிற்கு குந்தகம் விளைவிப்பவர்கள் கைது செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. சென்னையில் உள்ள அனைத்து அரசு பணிமனைகளிலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.