தமிழக செய்திகள்

கிருஷ்ணகிரியில் ரூ.43 லட்சத்தில் மக்காத குப்பை சேமிப்பு கிடங்கு: நகராட்சி தலைவர் தகவல்

தினத்தந்தி

கிருஷ்ணகிரி:

கிருஷ்ணகிரி நகராட்சி தலைவர் பரிதா நவாப் நிருபர்களிடம் கூறியதாவது:-

கிருஷ்ணகிரி நகராட்சிக்குட்பட்ட 4 குப்பை கிடங்குகளில் சேர்ந்துள்ள குப்பைகளை அகற்றும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. தற்போது கிருஷ்ணகிரி நகராட்சிக்கு உட்பட்ட நவீன தகன மேடை அருகில், ரூ.43 லட்சம் மதிப்பில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் `மெட்டீரியல் ரெகவி பெசிலிட்டீஸ்' எனும் மறுசுழற்சிக்கு பயன்படும் மக்காத குப்பை சேமிப்பு கிடங்கு கட்டுமான பணி முடியும் தருவாயில் உள்ளது. நகராட்சி குப்பை கிடங்குகளில் மக்கும் குப்பையிலிருந்து, உரம் தயாரிக்கும் பணி நடக்கிறது. மக்காத குப்பை சிப்பு கிடங்கிலிருந்து மறுசுழற்சிக்கு உதவும், பிளாஸ்டிக் உள்ளிட்ட மக்கா குப்பைகள் சேகரிக்கப்பட்டு தொழிற்சாலைகளுக்கு அனுப்பப்படும். திருவண்ணாமலை சாலையில், இதே போல மற்றொரு மக்கா குப்பை சேமிப்பு கிடங்கும் கட்டப்பட உள்ளது. தொடர்ந்து "லேயிங் மிஷின்", "எக்ஸ்ட்ரூடர் மிஷின்" உள்ளிட்டவைகள் போடப்பட்டு, மக்கா குப்பையை இறுக்கி, தொழிற்சாலைகளுக்கு அனுப்பும் பணியும் தொடங்கப்படும். இதன் மூலம் நகரில் குப்பைகள் தேங்காத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்