தமிழக செய்திகள்

வெளிநாட்டு பயணம்; சென்னை தலைமை செயலகத்தில் முதல் அமைச்சர் ஆலோசனை

சென்னை தலைமை செயலகத்தில் முதல் அமைச்சர் பழனிசாமி வெளிநாட்டு பயணத்திற்கு முன் அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

சென்னை,

தமிழக முதல் அமைச்சர் பழனிசாமி அமெரிக்கா, இங்கிலாந்து ஆகிய நாடுகளுக்கு வருகிற 28ந்தேதி முதல் செப்டம்பர் 7ந்தேதி வரை சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.

அவர் வெளிநாட்டில் உள்ள காலகட்டத்தில் அவரது பொறுப்புகள் வேறு யாரிடமும் ஒப்படைக்கப்படாது. முதல்வர் எங்கிருக்கிறாரோ அங்கிருந்து கையொப்பமிடப்பட்டு பேக்ஸ் வழியே அதிகாரிகளுக்கு தகவல் அனுப்பி வைக்கப்படும்.

இந்த நிலையில் வெளிநாட்டு பயணத்திற்கு முன், சென்னை தலைமை செயலகத்தில் முதல் அமைச்சர் பழனிசாமி தலைமையில் கல்வி, உணவு, எரிசக்தி துறை மற்றும் தொழில்துறை தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் அமைச்சர்கள் செங்கோட்டையன், தங்கமணி, எம்.சி. சம்பத், காமராஜ் மற்றும் தலைமை செயலாளர் சண்முகம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தொழில் துறை ஆய்வு கூட்டத்தில், பொருளாதார மந்த நிலை குறித்தும் முதல் அமைச்சர் ஆலோசனை நடத்தினார்.

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை