தமிழக செய்திகள்

ரூ.9 லட்சத்தில் பயணிகள் நிழற்குடை

அரசூர் ஊராட்சியில் ரூ.9 லட்சத்தில் பயணிகள் நிழற்குடையை ராமலிங்கம் எம்.பி. திறந்து வைத்தார்

கொள்ளிடம்;

கொள்ளிடம் அருகே அரசூர் ஊராட்சியில் மயிலாடுதுறை எம்.பி. தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ. 9 லட்சத்தில் புதிய நிழற்குடை கட்டப்பட்டு திறப்பு விழா நடைபெற்றது. பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். கொள்ளிடம் ஒன்றியக்குழு தலைவர் ஜெயபிரகாஷ், மேற்கு ஒன்றிய செயலாளர் செல்ல சேது ரவிக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி தலைவர் இமயவேல் வரவேற்றார். நிவேதாமுருகன் எம்.எல்.ஏ., ராமலிங்கம் எம்.பி. ஆகியோர் பயணிகள் நிழற்குடை கட்டிடத்தை திறந்து வைத்தனர். தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர். நிகழ்ச்சியில் நகர செயலாளர் சுப்பராயன், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் மணவாளன், விஜயேஸ்வரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

SCROLL FOR NEXT