தமிழக செய்திகள்

திருவண்ணாமலையில் விசாரணைக் கைதி உயிரிழப்பு - போலீசார் மீது உறவினர்கள் குற்றச்சாட்டு

திருவண்ணாமலையில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நபர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தினத்தந்தி

திருவண்ணாமலை,

திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு வட்டத்துக்கு உட்பட்ட தட்டரணை கிராமத்தைச் சேர்ந்த தங்கமணி என்பவரை சாராய வழக்கு தொடர்பான விசாரணைக்காக கடந்த 26 ஆம் தேதி மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசார் கைது செய்து அழைத்துச் சென்றுள்ளனர்.

இதையடுத்து கடந்த 2 நாட்களாக அவர் திருவண்ணாமலை கிளைச்சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் நேற்று இரவு அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து, திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு தங்கமணி உயிரிழந்தார்.

இது குறித்து தகவலறிந்த உறவினர்கள், விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட தங்கமணி மீது போலீசார் நடத்திய தாக்குதல் காரணமாகவே அவர் உயிரிழந்ததாகவும், இதற்கு காரணமாக காவலர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தின் முன்பு திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை மாவட்ட கலெக்டர் நேரில் சந்தித்து பேசினார். விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நபர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு