தமிழக செய்திகள்

காயிதே மில்லத் நினைவிடத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை

காயிதே மில்லத் நினைவிடத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

சென்னை,

கண்ணியத்தென்றல் என்று அழைக்கப்படும் காயிதே மில்லத்தின் 127-வது பிறந்தநாள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்படுகிறது.

இந்த நிலையில், காயிதே மில்லத் பிறந்தநாளையொட்டி சென்னை திருவல்லிக்கேணி வாலாஜா பெரிய பள்ளிவாசல் வளாகத்தில் உள்ள அவரது நினைவிடத்தில் தமிழக அரசு சார்பில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் போர்வை அணிவித்தும் மலர் தூவியும் மரியாதை செலுத்தினார்.

அதனை தொடர்ந்து அமைச்சர்கள் கே.என்.நேரு, துரைமுருகன், மா.சுப்பிரமணியன் ஆகியோரும் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

ஒரேநாளில் 18 கேள்விகளுக்கு பதில் மக்களவையில் கேள்வி நேரத்தை வேகப்படுத்திய சபாநாயகர் ஓம் பிர்லா

ஆந்திராவில் ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகளை பெற்றெடுத்த இளம்பெண்

அரசு ஊழியர்கள் கதர் ஆடை அணிவது கட்டாயம் - கர்நாடக அரசு உத்தரவு

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு