தமிழக செய்திகள்

திருச்சி-சென்னை விமான சேவை அதிகரிப்பு

திருச்சி-சென்னை விமான சேவை 6 சேவைகளாக அதிகரிக்கப்பட உள்ளது.

திருச்சி,

திருச்சி விமான நிலையத்தில் இருந்து இயக்கப்பட்டு வந்த 6 விமான சேவைகளை இண்டிகோ நிறுவனம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு 2 சேவைகளாக குறைத்து அந்த இரண்டு சேவைகளும் ஏர் பஸ் விமான சேவையை இயக்குவதாக அறிவித்து இயக்கி வந்தது.

இந்த நிலையில் கடந்த ஜனவரி மாதம் முதல் மீண்டும் ஏ.டி.ஆர். விமான சேவைகளை இயக்கும் வகையில் திருச்சி-சென்னை விமான சேவை 3 சேவைகளாக அதிகரிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து வருகிற மார்ச் 29-ந்தேதியில் இருந்து திருச்சி-சென்னை விமான சேவை 6 சேவைகளாக அதிகரிக்கப்பட உள்ளது. ஏற்கனவே இயக்கப்பட்டு வந்த 6 சேவைகளை மீண்டும் இண்டிகோ நிறுவனம் திருச்சியில் இருந்து சென்னைக்கு இயக்க உள்ளதால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.