தமிழக செய்திகள்

திருச்சியில் அரசு சொகுசு பஸ் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து - 20 பேர் படுகாயம்

திருச்சியில் அரசு சொகுசு பஸ் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து 20 பேர் படுகாயம் அடைந்தனர்.

தினத்தந்தி

திருச்சி,

பெங்களூருவில் இருந்து அரசு சொகுசு பஸ் ஒன்று 49 பயணிகளுடன் திருச்சி நோக்கி வந்து கொண்டிருந்தது. இன்று அதிகாலை திருச்சி அருகே மஞ்சகோரை பகுதியில் இந்த பஸ் வந்துள்ளது. அப்போது சாலையில் உள்ள ஒரு வளைவில் பஸ்சை டிரைவர் திருப்ப முயன்றுள்ளார்.

இதில் அவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை. இருப்பினும் பஸ்சில் இருந்த 4 சிறுவர்கள் உட்பட 20-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்தனர்.

விபத்துகுறித்து தகவல் அறிந்த வாத்தலை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மீட்பு பணியில் ஈடுப்பட்டனர். அப்போது காயம் அடைந்தவர்களை ஆம்புலன்ஸ் உதவியுடன் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இந்த விபத்து தொடர்பாக வாத்தலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு