தமிழக செய்திகள்

திருச்சி ஆண்கள் அணி சாம்பியன்

திருச்சி ஆண்கள் அணி சாம்பியன் பட்டம் வென்றது.

தினத்தந்தி

தமிழ்நாடு வலுதூக்கும் சங்கம் சார்பில் மாநில வலு தூக்கும் போட்டி திருச்சியில் 2 நாட்கள் நடந்தது. இதில் திருச்சி, கரூர், நெல்லை, சென்னை, ஈரோடு உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 90 பெண்கள் உள்பட 570 பேர் கலந்து கொண்டனர். சப்-ஜூனியர், ஜூனியர், சீனியர் மற்றும் மாஸ்டர்ஸ் பிரிவுகளில் பெஞ்ச் பிரஸ், டெட்லிப்ட் போட்டிகள் நடத்தப்பட்டன. போட்டிகளின் முடிவில் ஆண்கள் பிரிவில் திருச்சி அணி அதிக புள்ளிகளை பெற்று சாம்பியன் பட்டத்தை வென்றது. பெண்கள் பிரிவில் நெல்லை அணி முதலிடத்தை தட்டிச்சென்றது. பின்னர் நடந்த பரிசளிப்பு விழாவில் தமிழ்நாடு வலு தூக்கும் சங்க மாநில தலைவர் வண்டு ராமச்சந்திரன், மாநில செயலாளர் இளங்கோவன், பொருளாளர் தங்கராஜ் ஆகியோர் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ், பதக்கம் மற்றும் கோப்பைகளை வழங்கினர்.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு