தமிழக செய்திகள்

திருச்சி - வேளாங்கண்ணி ரெயில் காரைக்காலுடன் நிறுத்தம்

திருச்சி - வேளாங்கண்ணி பயணிகள் ரெயில் வரும் மே மாதம் 20-ந் தேதி முதல் காரைக்காலுடன் நிறுத்தப்படுகிறது.

சென்னை,

ரெயில்களில் பயணம் செய்வது தான் பெரும்பாலான மக்களின் விருப்பமாக இருக்கும். இதற்கு முக்கிய காரணமாக இருப்பது பாதுகாப்பு, அடிப்படை வசதி, குறைந்த கட்டணம் ஆகும். எனவே தினந்தோறும் பல லட்சம் மக்கள் ரயில்களில் பயணம் செய்து வரும் நிலையில், அனைத்து ரயில்களிலும் மக்களின் கூட்டம் அதிகரித்தே காணப்படுகிறது.

இந்த நிலையில் தெற்கு ரயில்வே சார்பாக அவ்வப்போது ரயில்களில் கூடுதல் பெட்டிகளை இணைப்பதும், புதிய ரயில் சேவையை அறிவித்தும் வருகிறது. இந்த நிலையில் தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில்,

இது தொடர்பாக, தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

திருச்சியில் இருந்து மாலை 4.45 மணிக்கு புறப்படும் பயணிகள் ரெயில் இரவு 9.20 மணிக்கு காரைக்காலை சென்றடைகிறது. மறுமார்க்கத்தில், காரைக்காலில் இருந்து வரும் மே மாதம் 21-ந் தேதி காலை 6.35 மணிக்கு புறப்படும் பயணிகள் ரெயில் பகல் 11.20 மணிக்கு திருச்சியை சென்றடைகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.