தமிழக செய்திகள்

புது மாரியம்மன் திருவீதி உலா

பரமத்திவேலூரில் மழை வேண்டி புது மாரியம்மன் திருவீதி உலா நடைபெற்றது.

தினத்தந்தி

பரமத்திவேலூர்

பரமத்திவேலூர் பேட்டை புது மாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி தினமும் இரவு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும், சிறப்பு அலங்காரமும், அம்மன் பல்வேறு வாகனங்களில் திருவீதி உலா வரும் நிகழ்ச்சியும் நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் மாரியம்மனுக்கு பச்சை பட்டு உடுத்தினால் மழை வரும் என்பது ஐதீகம். அதேபோல் நேற்றுமுன்தினம் மழை வேண்டி, மாரியம்மனுக்கு பச்சை பட்டு உடுத்தி முக்கிய வீதிகள் வழியாக திருவீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதையடுத்து இரவு பரமத்திவேலூரில் மழை பெய்ததால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது