தமிழக செய்திகள்

திருச்சியில் வேன் மீது லாரி மோதல்; 25 பேர் காயம்

திருச்சியில் வேன் மீது லாரி மோதியதில் 25 பேர் காயம் அடைந்து உள்ளனர்.

தினத்தந்தி

திருச்சி,

திருச்சி முக்கொம்பு அருகே சாலையில் சென்று கொண்டிருந்த வேன் ஒன்றின் மீது லாரி மோதி விபத்து ஏற்பட்டு உள்ளது. இந்த சம்பவத்தில் வேன் கவிழ்ந்துள்ளது.

இதில், 25 பேர் காயம் அடைந்து உள்ளனர். இதுபற்றி தகவல் அறிந்து போலீசார் சம்பவ பகுதிக்கு சென்று உடனடியாக மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். காயமடைந்தவர்கள் திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளனர். அவர்களில் 3 பேரின் நிலைமை கவலைக்குரிய வகையில் உள்ளது.

இதனால், அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்திற்கான காரணம் பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்