தமிழக செய்திகள்

லாரி-மோட்டார் சைக்கிள் மோதல்; கொத்தனார் பலி

கோட்டூர் அருகே லாரி - மோட்டார் சைக்கிள் மோதி கொண்ட விபத்தில் கொத்தனார் பலியானார். இதுதொடர்பாக லாரி டிரைவரை போலீசார் கைது செய்தனர்.

தினத்தந்தி

கோட்டூர்:

கோட்டூர் அருகே லாரி - மோட்டார் சைக்கிள் மோதி கொண்ட விபத்தில் கொத்தனார் பலியானார். இதுதொடர்பாக லாரி டிரைவரை போலீசார் கைது செய்தனர்.

கொத்தனார்

கோட்டூர் அருகே கம்பங்குடி ஆர்ச் பகுதியைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன். இவருடைய மகன் கார்த்திகேயன் (வயது37). கொத்தனார். இவருடைய மனைவி சுதா ரஞ்சனி. இவர்களுக்கு மகதிஷ் (7) என்ற மகனும், 2 மாத பெண் குழந்தையும் உள்ளனர்.இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு கார்த்திகேயன் வேலை முடிந்து மன்னார்குடியில் இருந்து வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

லாரி மீது மோதி பலி

அப்போது திருத்துறைப்பூண்டி சாலையில் செம்மொழி நகர் என்ற இடத்தில் வந்த போது முன்னாள் சென்ற லாரியின் மீது எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மோதியது.இந்த விபத்தில் படுகாயம் அடைந்த கார்த்திகேயன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த கோட்டூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவக்குமார், சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோவன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று கார்த்திகேயன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மன்னார்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

டிரைவர் கைது

மேலும் இது தொடர்பான போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவர் திருப்பூர் மாவட்டம் கணபதிபாளையம் பகுதியைச் சேர்ந்த மோகன்ராஜ் (33) என்பவரை கைது செய்தனர்.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை